இங்கிலாந்தில் ஹிந்து கோயில் இடிப்பு: இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அட்டூழியம்!

இங்கிலாந்தில் ஹிந்து கோயில் இடிப்பு: இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அட்டூழியம்!

Share it if you like it

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியால் இங்கிலாந்தில் ஹிந்து கோயில் இடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, துபையில் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி, இம்மாதம் 11-ம் தேதி நிறைவடைந்தது. ஆகஸ்ட் 28-ம் தேதி நடந்த இப்போட்டியின் முதல் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து வெற்றிபெற்றது இந்தியா. இதனால், பாகிஸ்தான் உள்ளிட்ட ஆதரவு இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் முஸ்லீம்கள், அப்பகுதி ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தினர். அந்த வகையில், இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளின் முஸ்லீம் அடிப்படைவாதிகள், அப்பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள் மீதும், ஹிந்துக்களின் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில், இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில்தான் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆயுதங்களுடன் வந்த இஸ்லாமியர்கள், ஹிந்துக்களை கண்மூடித்தனமாகத் தாக்கினர். இதில், பலரும் காயமடைந்தனர்.

இதையடுத்து, இஸ்லாமியர்களின் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, ஹிந்துக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இங்கிலாந்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட இஸ்லாமியர்கள், நேற்று முன்தினம் இரவு லெய்செஸ்டர் நகரில் இருந்து ஹிந்து கோயில் மீது தாக்குதல் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனால், ஹிந்து கோயிலை இஸ்லாமியர்கள் இடிப்பதை வேடிக்கை பார்த்தார்களே தவிர, இடிப்பதை தடுப்பது, குற்றவாளிகளை கைது செய்வது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்னர். இது, அப்பகுதி ஹிந்துக்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

ஆகவே, இனியும் தாமதித்தால், இஸ்லாமியர்களின் வன்முறை அதிகரிக்கும் என்று கருதிய ஹிந்துக்கள் நூற்றுக்கணக்கானோர், இன்று காலையில் லெய்செஸ்டர் நகரில் திரண்டு அமைதிப் பேரணி நடத்தினர். ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பேரணி சென்ற ஹிந்துக்கள் மீது கண்ணாடி பாட்டில்களை வீசியும், கற்பகளை வீசியும் அராஜகத்தில் ஈடுபட்டனர். மேலும், காவி கொடியையும் அவமதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனாலும், காவல்துறையினரால் இஸ்லாமியர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஹிந்துக்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க முடியவில்லை. வெறும் பெயரளவில் இஸ்லாமியர்கள் 27 பேரை மட்டும் கைது செய்தனர்.

இதுகுறித்து ஆய்வாளரான அன்ஷுல் சக்சேனா, தனது ட்விட்டர் பக்கத்தில், லெய்செஸ்டர் நகரத்திலுள்ள ஹிந்துக்களைத் தாக்குவதற்கு திட்டமிடப்பட்ட சில விவரங்களை பகிர்ந்திருக்கிறார். அதில், பயங்கரவாதிகளும், இஸ்லாமியர்களும் சமூக ஊடகங்களில் திட்டத்தை பகிர்ந்து கொள்வது மற்றும் ஹிந்துக்களை தாக்க திட்டமிட்டது எப்படி என்பதை விளக்கி இருக்கிறார். மேலும், இங்கிலாந்தில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் பலரும், லெய்செஸ்டர் நகரில் முஸ்லிம்களும், பாகிஸ்தானிய இஸ்லாமியர்களும், அப்பகுதியில் உள்ள ஹிந்துக்கள் மற்றும் அவர்களது வீடுகளைத் தாக்கியது தொடர்பான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். ஹிந்துக்களின் வாகனங்கள் தாக்கப்படுவதையும், ஹிந்துக் குடும்பங்கள் தங்கள் வீடுகளில் பயந்துபோய் பதுங்கியிருந்ததையும் அக்காணொளிகள் வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.


Share it if you like it