பிரதமர் மோடி பிறந்தநாள்: 87,000 பேர் ரத்ததானம்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: 87,000 பேர் ரத்ததானம்!

Share it if you like it

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் 87,000 பேர் ரத்ததானம் செய்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் நேற்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு 15 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளையும் பா.ஜ.க அறிவித்திருக்கிறது. மேலும், குஜராத்தில் பா.ஜ.க. துணைத் தலைவர் ஒருவர், மோடிக்கு 51 அடியில் இரும்புச் சிலை அமைக்க பூமிபூஜை விழாவை நடத்தினார். அதேபோல, நாடு முழுவதும் ரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தவகையில், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் நேற்று நடந்த ரத்ததான முகாமில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ரத்ததானம் செய்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த ரத்ததான முகாம் தேசிய தன்னார்வ ரத்ததான தினமான அக்டோபர் 1-ம் தேதி வரை நாடு முழுதும் 5,980 இடங்களில் நடக்கிறது. இம்முகாமில் ரத்ததானம் வழங்க இதுவரை 1.50 லட்சம் பா.ஜ.க.வினர் பதிவு செய்துள்ளனர். முதல் நாளான நேற்று மட்டும் 87,000 பேர் ரத்ததானம் செய்து உலக சாதனை படைத்திருக்கிறார்கள். இம்முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்ய விரும்புவோர், ‘ஆரோக்ய சேது’ செயலி அல்லது ‘இ ரக்த்கோஷ்’ இணையதளத்தில் பதிவு செய்யலாம். ரத்ததானம் செய்வது உன்னதமான சேவை. ஒரு யூனிட் என்பது 350 மி.லி. ரத்தம்தான். எனவே, 3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம்” என்றார்.


Share it if you like it