அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தி.மு.க. மூத்த தலைவர் ஆ. ராசா மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை வறுத்தெடுத்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திராவிடர் கழக தலைவராக இருப்பவர் கி. வீரமணி. இவருக்கு, அண்மையில் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், கலந்து கொண்ட ஆ. ராசா வழக்கம் போல ஹிந்துக்களை மிகவும் கீழ்த்தரமாகவும், இழிவாகவும் விமர்சனம் செய்து இருந்தார். அவர் கூறியதாவது;
நீ கிறிஸ்தவனாக இஸ்லாமியனாக பெர்சியனாக இல்லை என்றால் ஹிந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? ஹிந்துவாக இருக்கும் வரை சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர், விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும் என பேசி இருந்தார்.
ஆ.ராசாவின் கருத்து தமிழகத்தையும் தாண்டி, இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் தங்களது கடும் எதிர்ப்பினை ஆ.ராசாவிற்கு தெரிவித்து இருந்தன. இதனை தொடர்ந்து, பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி பத்திரிகையாளர்களை சந்தித்த போது,
ஹிந்துக்களையும், கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும், பிரித்து பேசுபவன் மனிதனே கிடையாது. மூன்று மதமும் சேர்ந்தது தான் தேசிய கொடி. உங்கள், ஓட்டிற்காக தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள். மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டான், உங்களுக்கு தான் ரிவீட் அடிப்பான். மதத்தை தவறாக பேசினால் அவனை செருப்பால் அடிப்பேன் என ஆவேசத்துடன் பேசி இருந்தார்.
இதனிடையே, அ.தி.மு.க. மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமாக இருப்பவர் சி.வி. சண்முகம். இவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தையும், ஆ. ராசாவை மிக கடுமையாக விமர்சனம் செய்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.