நான் மட்டும்தான் கட்சிக்காரர்களை மணல் அள்ள அனுமதி கொடுக்கிறேன் என தி.மு.க. எம்.பி. ராஜேஷ்குமார் பேசிய காணொளி ஒன்று தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. ஆட்சி அமைந்தால் இயற்கை வளங்களின் நிலைமை பெரும் கேள்விக்குறியாக மாறிவிடும் என்பது பல சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கருத்து. அதனை மெய்ப்பிக்கும் வகையில், தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனிடையே, தமிழக முதல்வராக 11.00 மணிக்கு ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டதும். 11-05.க்கு மாட்டு வண்டியை ஆற்றில் இறக்கி நீங்கள் மணல் அள்ளலாம். எந்த அதிகாரியாவது தடுத்தால் நீங்கள் எனக்கு உடனே போன் செய்யுங்கள். அவர், அங்கு இருக்க மாட்டார் என்று கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது செந்தில் பாலாஜி பேசி இருந்தார்.
இதையடுத்து, தமிழகத்தில் தொடர்ந்து மணல் திருடும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும், தமிழகத்தின் சொத்தான கனிமவளங்கள் அண்டை மாநிலங்களுக்கு, கடத்தப்படும் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டம் பொட்டல் என்கிற கிராமத்தில் எம்.சாண்ட் தயாரிக்கும் ஆலை நடத்துவதாகக் கூறி, கேரள மாநிலம் பத்தனம் திட்டாவை சேர்ந்த 6 கிறிஸ்தவ பாதிரியார்கள் மணல் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனை தொடர்ந்து, பாலமேடு அருகிலுள்ள எர்ரம்பட்டி பகுதி விவசாய நிலங்களை சீரமைப்பதாக அனுமதி பெற்ற தி.மு.க.வினர் பாலமேடு மஞ்சமலை ஆறு, பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில் மணல் அள்ளி வந்தனர். கனிமவளத்துறையிடம் 3 முதல் 6 அடி ஆழத்திற்கு அனுமதி பெற்று விட்டு 10 அடிக்கும் மேல் மணல் அள்ளியுள்ளனர். இதுகுறித்தான, செய்தியினை பிரபல பத்திரிகையான தினமலர் வெளியிட்டு இருந்தது.
இப்படியாக, தி.மு.க. ஆட்சியில் சட்ட விரோத மணல் அள்ளும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தான், தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் மணல் அள்ளும் உரிமையை தி.மு.க.வை சார்ந்த கட்சிகாரர்களுக்கு மட்டுமே தாம் கொடுப்பதாக பேசியிருக்கும் காணொளி ஒன்று பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது.
இதுகுறித்தான செய்தியினை தந்தி டிவி வெளியிட்டு இருக்கிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.