ஓசி பஸ் பயணம் என தமிழக பெண்களை அமைச்சர் பொன்முடி இழிவுபடுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த நிலையில், பிரபல ஊடகமான விகடன் பெண்களிடம் கருத்து கேட்ட போது பலர் தங்களது உள்ள குமுறல்களை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் தொகுதி, கலைஞர் நகர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இதையடுத்து, பேசிய அமைச்சர், உங்களுக்கு எல்லாம் ரூ. 4,000 ஆயிரம் கொடுத்தது யாரு வாய் திறந்து சொல்லுங்க. இப்ப, நீங்க எப்படி பஸ்ஸில் வருகிறீர்கள். இங்கிருந்து, கோயம்பேடு போனாலும் எங்கே? போனாலும் ஓசீ பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என தமிழக பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்து இருந்தார்.
அமைச்சர் பொன்முடியின் நக்கலான கருத்து பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக, பெண்களிடம் கடும் கோவத்தை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் அமைச்சரின் கருத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில், அமைச்சர் பொன்முடி பேசிய ( காணொளியை & ஆடியோவை ) பெண்களிடம் காட்டி பிரபல இணையதள ஊடகமான விகடன் காணொளியாக பதிவு செய்து இருக்கிறது. விகடனுக்கு பேட்டி கொடுத்த அனைவருமே தி.மு.க.வை மிக கடுமையாக சாடி இருக்கின்றனர். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.