அரசு பேருந்தில் கணவன் முன்னிலையிலேயே பெண்ணிடம் சில்மிஷம் செய்த காவல்துறை உயர் அதிகாரிக்கு பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பள்ளியை முடித்து விட்டு மாலையில் பத்திரமாக வீடு திரும்பும் வரை பெற்றோர்கள் ஒருவித அச்ச உணர்வுடனே இருந்து வருகின்றனர். மேலும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
இதுதவிர, பெண் காவலர்களுக்கு தி.மு.க.வின் கழக கண்மணிகள் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், தி.மு.க.வின் தென்காசி மாவட்ட செயலாளர் பெண் காவல் உயர் அதிகாரியிடம் கீழ்த்தராமக நடந்து கொண்ட சம்பவத்தை குறிப்பிட்டு சொல்லலாம். இப்படியாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சந்தி சிரித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தில் தனது கணவருடன் பெண்மணி ஒருவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, அவர்களது பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்த நபர் அப்பெண்ணனை சீண்டியுள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அப்பெண் தனது கணவரிடம் இதுபற்றி கூறியுள்ளார். இதையடுத்து, அவரது கணவர் சில்மிஷம் செய்த நபரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு, அந்த நபர் நான் போலீஸ்காரன் என்று திமிருடன் பதில் அளித்துள்ளார். மேலும், அப்பெண்ணின் கணவரை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்துள்ளார்.
வாக்குவாதம் செய்த காவல்துறை அதிகாரி போதையில் இருப்பது போல் தெரிகிறது. அரசு பேருந்தில் பெண் பயணிக்கு ஏற்பட்ட கொடூரத்தை யாரும் தட்டிக்கேட்க முன்வரவில்லை. கண்டக்டர் உட்பட அனைவரும் கள்ள மெளனமாக இருந்தது கொடுமையிலும் கொடுமை. அப்பேருந்தில், பயணம் மேற்கொண்ட யாரோ ஒருவர் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இக்காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.
அநீதி இழைக்கப்பட்ட பெண்ணிற்கும், கடும் மன உளைச்சலுக்கு உள்ளான அவரது கணவருக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், காவல்துறையில் இருப்பவர்கள் பொதுமக்களிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.