சீரியல் நடிகையை காதல் வலையில் வீழ்த்தி, மத மாற்றம் செய்ய வைத்து திருமணம் செய்து, கர்ப்பமடைந்த நிலையில், அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்வதாகக் கூறி, அந்த நடிகை கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பாகமண்டலா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் மகள் திவ்யா. தமிழில் ‘செவ்வந்தி’ சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா மகன் நைனா முகமது என்கிற அர்னாவ். இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு ‘கேளடி கண்மணி’ என்கிற சீரியலில் ஒன்றாக நடித்தபோது பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நட்பு காதலாகி மாறிய நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த சூழலில், திவ்யா கர்ப்பமடையவே, இருவரும் கடந்த ஜூன் மாதம் இஸ்லாமிய முறைப்படி பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். எனினும், இத்திருமணத்தை இருவரும் ரகசியமாக வைத்திருந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த திவ்யா, தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் தெரியப்படுத்தினார்.
இதையடுத்து, திவ்யாவுக்கு வாழ்த்துகள் குவிந்தன. ஆனால், அர்னாவ் திருமணம் குறித்து வாய் திறக்கவே இல்லை. இந்த சூழலில்தான், “செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்துவரும் எனது கணவர் அர்னாவ், அதே சீரியலில் நடிக்கும் நடிகையை காதலிக்கிறார். இதன் காரணமாக என்னை அடித்து துன்புறுத்தி வருகிறார். வயிற்றில் தாக்கியதால் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதனால் எனக்கு எப்போது வேண்டுமானாலும் கருகலையும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்” என்று கூறி, மருத்துவமனையில் இருந்து கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகை திவ்யா. மேலும், அர்னாவ் முஸ்லீம் என்பதால், நான் மதம் மாறினால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி, தன்னை கட்டாயப்படுத்தி மதம் மாற வைத்ததாகவும், அவர் வாங்கிய கடனை எல்லாம் தான்தான் அடைத்து வந்ததாகவும் அந்த வீடியோவில் உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அர்னாவ்வை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
இதனிடையே, நடிகை திவ்யாவுக்கு ஆதரவாக ஹிந்து அமைப்புகள் களத்தில் குதித்திருக்கின்றன.