பா.ஜ.க. மூத்த தலைவர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் சங்கிக்கு விளக்கம் கொடுத்து இருக்கும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது
சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில், ஸ்ரீ டிவியின் 7 – ஆம் ஆண்டு விழா நேற்றை தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் பொதுச் செயலாளருமான பேராசிரியர் ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த வகையில், இவர் பேசும் போது இவ்வாறு கூறினார்;
தேச பக்தியோடு நாம் எதாவது சொன்னால் நம்மை சங்கி என்று அழைக்கிறார்கள் என்று ஐயா கிருஷ்ணமூர்த்தி சொன்னார். இந்த தேசத்தையே மதம் மாற்றி விட வேண்டும் என்று நினைக்கிற அங்கியை விட, இந்த தேசத்தையே அழித்து விட துடிக்கும் லுங்கியை விட, இந்த தேசத்திற்கு என்றே தியாகம் செய்ய பிறந்த சங்கியாக இருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன். ஆகவே, சங்கி என்ற வார்த்தை அக்மார்க் வார்த்தை. அதை சொல்பவர்கள் சிலர் மங்கியாக இருக்கலாம். எனவே, இந்த வார்த்தையை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு, ஊழல்வாதி! லஞ்சப்பேர்வழி தமிழின துரோகி! கட்டப் பஞ்சாயத்து! பொய்யன், புளுகன் ஓசிச்சோறு! கொள்ள கோஷ்டி துரோகக் கும்பல்! மாஃபியா! வேடதாரி இந்த வார்த்தைகளை விட ‘சங்கி’ என்ற வார்த்தை சிறந்த வார்த்தைதான் என குறிப்பிட்டு இருந்தார்.