பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தாம் பெற்ற மதிப்பெண் குறித்து திருமாவளவன் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், டாக்டர் பட்டம் பெற்றவர். இவரது பேச்சு உண்மைக்கு மாறாகவும், வாய்க்கு வந்தபடி உளறி கொட்டும் வகையில் இருக்கும். மேலும், எந்தவித புரிதலும் இல்லாமல் பேசக் கூடியவர். அதனை உறுதிப்படுத்தும் வகையில், பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், ஜி.எஸ்.டி. குறித்து எந்த அளவிற்கு தமக்கு ஞானம் உள்ளது என்பதை இவர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
இப்படிப்பட்ட சூழலில், பத்தாம் வகுப்பு படிக்கும் போது, தாம் பள்ளியில் பெற்ற மதிப்பெண் குறித்து திருமாவளவன் பேசியிருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, பத்தாம் வகுப்பு படிக்கும் போது 100-க்கு 115 மதிப்பெண்ணை எடுத்தாராம். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்த காரணத்தினால், இந்த மார்க் தமக்கு கிடைத்ததாக பெருமையாக கூறியிருக்கிறார். தாய் சிறுத்தையின் இந்த கப்சா கதையை கேட்டு விட்டு சிறுத்தை குட்டிகள் ஆரவாரம் செய்த சம்பவம் தான் கொடுமையிலும் கொடுமை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.