பெண் பத்திரிகையாளர் ரானா அயூப், பொதுமக்களிடம் இருந்து வசூலித்த 2.69 கோடி ரூபாயை தனது சொந்த செலவுக்கு பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.
டெல்லியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ரானா அயூப். பேக்ட் செக் என்கிற பெயரில் பொய்ச் செய்திகளை பரப்பி வரும் ஆல்ட் நியூஸ் முகமது ஜூபைரின் நெருங்கிய தோழி. இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 3 நிதி திரட்டும் பிரசாரங்களை மேற்கொண்டார். ‘கீட்டோ’ எனப்படும் நிதி திரட்டும் இணையதளம் வாயிலாக இப்பணத்தை வசூல் செய்தார். இவ்வாறு திரட்டப்படும் பணம், அஸ்ஸாம், பீஹார், மஹாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்கு செலவிடப்படும். மேலும், குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கு செலவிடப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி, 2,69,44,680 கோடி ரூபாய் வசூலானது. இப்பணத்தை, ரானா ஆயூப் தனது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியதாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஜியாபாத் போலீஸார் கடந்தாண்டு வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வந்தது. அப்போது, வசூலான நிதி ரானா அயூபின் தந்தை மற்றும் சகோதரியின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டு, பின்னர் ரானாவின் தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. இதில், நிவாரணப் பணிகளுக்கு 29 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டதும் தெரியவந்தது.
மேலும், ரானா அயூப்புக்கு வெளிநாட்டில் இருந்தும் ஏராளமானோர் நன்கொடை அளித்திருந்தனர். இதற்கு ரானா அயூப் முறையான அனுமதி பெறவில்லை. இதையடுத்து, பணப் பரிமாற்ற மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ரானா அயூப் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில், காஜியாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், பத்திரிகையாளர்ரான ரானா அயூப், மக்களை ஏமாற்றி பணம் வசூலித்து, தனது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியதாகவும், வெளிநாட்டு நன்கொடை சட்டத்தை மீறியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.