தி.மு.க.விற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு வெறும் 5 இடங்கள் தான் கிடைக்கும் என பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த் குழு பகீர் தகவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர், முதல்வராக ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்பு சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இதன்காரணமாக, பொதுமக்கள் ஒருவித அச்ச உணர்வுடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் ஊழல், லஞ்சம் என தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுதவிர, தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் என அனைவரின் செயல்பாடுகளும் முகம் சுளிக்கும் வகையில் இருந்து வருகின்றன. அதனை உறுதிப்படுத்தும் காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.
இதனிடையே, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் கே.என். நேரு. இவரிடம், மிக நெருக்கமாக இருந்தவர் திருச்சி மாவட்டம் ஜீயர்புறம் காவல்துறை கண்காணிப்பாளர் பரவாசுதேவன் பெண் காவல் ஆய்வாளருடன் நிர்வாணமாக இருந்த புகைப்படம் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஒருபுறம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் மறுபுறம் அரசு அதிகாரிகள் என மத்தளத்திற்கு இருபக்கம் அடியாக விடியல் அரசு இருந்து வருகிறது.
இந்த நிலையில், ’தி.மு.க.வினர் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரின் பேச்சுக்கள் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வரும் தேர்தல்களில் எதிரொலிக்கும். இதைக் கட்டுப்படுத்த தவறினால், 2024 லோக்சபா தேர்தலில் தி.மு.க. வெறும் 5 இடத்துக்கு மேல் வெற்றி பெற கூட முடியாத நிலை ஏற்படலாம் என்று பிரசாந்த் கிஷோரின் குழு தி.மு.க.விற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில், தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை குறைந்து, பா.ஜ.க. அலை வீச துவங்கியுள்ளதாக அக்குழு தெரிவித்துள்ளது. மேலும், பா.ஜ.க. தனித்து நின்றால் 12% வாக்குகளையும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்தான, பத்திரிகை செய்தியை பிரபல அரசியல் விமர்சகர் செல்வ குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். ஆதாரம் இதோ.