மதரஸாவில் சிறுவனுக்கு பாலியல் டார்ச்சர்: மதகுரு முகமது ஜாவித் கைது!

மதரஸாவில் சிறுவனுக்கு பாலியல் டார்ச்சர்: மதகுரு முகமது ஜாவித் கைது!

Share it if you like it

மதரஸாவில் 11 வயது சிறுவனை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய மதகுருவை போலீஸார் கைது செய்தனர்.

இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு உருது மற்றும் குரான் சொல்லித் தருவதற்காக நாடு முழுவதும் மதரஸாக்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு செயல்படும் மதரஸாக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்கி வருகின்றன. இதர பள்ளிகளைப் போலவே இதுபோன்ற மதரஸாக்களிலும் வெளியூர் மாணவர்கள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் சிறுவர், சிறுமிகளிடம் அங்கு மதகுருக்களாக இருப்பவர்கள் அத்துமீறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன. இது தொடர்பாக, பல மதகுருமார்கள் கைது செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறி இருக்கின்றன. இந்த சூழலில், டெல்லியிலும் ஒரு சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வடகிழக்கு டெல்லியின் காரவால் நகர் பகுதியில் ஒரு மதரஸா செயல்பட்டு வருகிறது. இங்கு, உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்த முகமது ஜாவித் என்பவர் மதகுருவாக இருந்தார். இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி, மதரஸாவில் தங்கி படிக்கும் குருகிராம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனை, தனது அறைக்கு அழைத்திருக்கிறார். சிறுவனும் சென்ற நிலையில், மதகுரு ஜாவித் அச்சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதன் பிறகு இச்சம்பவம் தொடர்கதையாகி இருக்கிறது. இதை வெளியில் யாரிடமாவது சொன்னால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஜாவித் மிரட்டி இருக்கிறார். இதனால், அச்சிறுவனும் யாரிமும் சொல்லாமல் இருந்திருக்கிறான்.

இந்த நிலையில், மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு, கடந்த 7-ம் தேதி அச்சிறுவன் சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறான். விடுமுறை முடிந்து மீண்டும் மதரஸாவுக்கு அழைத்து வந்து விட்டிருக்கிறார்கள். ஆனால், அச்சிறுவன் மதரஸாவில் படிக்கவில்லை என்று கூறி அழுதிருக்கிறான். விசாரித்தபோதுதான், தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி அச்சிறுவன் விவரித்திருக்கிறான். பின்னர், சிறுவனின் தாயார் இதுகுறித்து காரவால் போலீஸில் புகார் அளித்தார். இதையறிந்த மதகுரு முகமது ஜாவித், மதரஸாவிலிருந்து தப்பி ஓடிவிட்டார். எனினும், ஒரு மசூதியில் மறைந்திருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக காரவால் நகர் காவல் நிலைய போலீஸ் அதிகாரிக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கிறது. மதரஸாவில் தொடரும் இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it