ஹிஜாப்புக்கு அனுமதி… தாலிக்கு தடை… இதாங்க மதச்சார்பின்மை!

ஹிஜாப்புக்கு அனுமதி… தாலிக்கு தடை… இதாங்க மதச்சார்பின்மை!

Share it if you like it

முஸ்லீமாக இருந்தால் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து கொண்டு தேர்வு அறைக்குள் செல்லலாம். அதேசமயம், ஹிந்துவாக இருந்தால் தோடு, கொழுசு மட்டுமல்ல தாலி முதற்கொண்டு கழற்ற வேண்டும். இது என்ன நீதி? இதற்குப் பெயர்தான் இந்தியாவின் மதச்சார்பின்மையா என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

பொதுவாகவே, நீட் உள்ளிட்ட மத்திய அரசுத் தேர்வுகளின்போது ஏகப்பட்ட கெடுபிடிகள் காட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, 2013-ம் ஆண்டு முதன் முதலில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது, முழுக்கை சுடிதார் அணிந்திருந்த பெண்களின் கைகள் அரைக்கையாக துண்டிக்கப்பட்டதோடு, பெண்களின் மூக்குத்தி, தோடு, கொழுசு ஆகியவற்றையும் தேர்வு அதிகாரிகள் கழற்றினர். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல, மத்திய அரசு தேர்வெழுதச் சென்ற பெண்களின் தாலிகள் உள்ளிட்டவையும் அகற்றப்பட்டன. இதுவும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால், இது ஹிந்துக்களுக்கு மட்டும்தான், இஸ்லாமியர்களுக்கு அல்ல என்பதுபோல ஒரு சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறி இருக்கிறது.

தெலங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இத்தேர்விலும் வழக்கம்போல ஏராளமான கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்பட்டன. ஆனால், இந்த கெடுபிடிகள் அனைத்தும் ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்களிடம் மட்டுமே காட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதாவது, ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி, கொழுசுகள் மட்டுமல்லாது, தாலியையும் கழற்றச் சொல்லி அதிகாரிகள் கெடுபிடி காட்டி இருக்கிறார்கள். அதேசமயம், ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வந்த இஸ்லாமிய பெண்களிடம் எந்த கெடுபிடியும் காட்டாமல் அப்படியே அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதில், ஹைலைட் என்னவென்றால், ஹிஜாப், பர்தா, புர்காவைக் கூட கழற்றச் சொல்லவில்லை என்பதுதான்.

வழக்கமாக, மத்திய அரசுத் தேர்வாக இருந்தாலும் சரி, மாநில அரசுத் தேர்வாக இருந்தாலும் சரி, சாதாரண உடைகள் அணிந்துதான் தேர்வெழுத வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், தெலங்கானாவில் விதிமுறையை மீறி ஹிஜாப், பர்தா, புர்காவுடன் இஸ்லாமிய பெண்களை தேர்வெழுத அனுமதித்திருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இதைப் பார்த்து விட்டு, ஹிந்து பெண்களுக்கு ஒரு நீதி, இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு நீதியா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். காரணம், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிவது கட்டாயம் என்று இஸ்லாமிய கடமைகளில் குறிப்பிடப்படவில்லை. இதை கர்நாடக உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தி இருக்கிறது.

ஆனால், ஹிந்து பெண்களுக்கு தாலி என்பது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. தாலியை கழற்றி வைப்பது அபசகுணமாகக் கருதப்படுகிறது. கணவன் இறந்து விட்டால் மட்டுமே பெண்கள் தாலியை கழற்ற வேண்டும் என்பதுதான் மரபு. அப்படி இருக்க, ஹிந்துக்களில் புனிதமாகக் கருதப்படும் தாலியை விட, இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப், பர்தா, புர்கா ஆகியவை முக்கியமானதாக கருதப்படுகிறதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் ஹிந்துக்கள். மேலும், சமூகநீதி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஒரு மதத்தினருக்கு ஒரு நீதி, மற்றொரு மதத்தினருக்கு ஒரு நீதி என்பது ஏற்புடையதல்ல என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கு, சமூக வலைத்தளங்களில் ஹிந்துக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தெலங்கானாவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதைத்தான் மதச்சார்பின்மை என்று உருட்டி வருகிறார்கள் என்று குமுறுகிறார்கள் ஹிந்துக்களும், ஹிந்து அமைப்பினரும்…


Share it if you like it