கள்ள காதலை நல்ல காதலாக மாற்ற ரூ. 10,000 ரூபாய் வாங்குவதாக தி.மு.க.வின் ஆதரவாளரான இஸ்மாயில் கூறியிருப்பது பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது.
தி.மு.க.வின் தீவிர ஆதரவாளராக இருப்பவர் இடிமுரசு இஸ்மாயில். இவர், அண்மையில் பிரபல இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசியதாவது ; ஒரு கள்ள காதலை சேர்த்து வைக்க ரூ. 10,000 வாங்குகிறேன். நான் 40 வருடம் அரசியலில் இருக்கிறேன். பல்வேறு ஊர்களில் பல்வேறு கட்சிகாரர்களிடம் கள்ளகாதல் மற்றும் காதல் பிரச்சனைகள் செல்கின்றன. ஆனால், அவர்களோ என்ன செய்கிறார்கள் தெரியுமா? எனக்கு ஒரு லட்ச ரூபாய் கொடு, இரண்டு லட்ச ரூபாய் கொடு என்று கேட்கிறார்கள். இது, ஆயிரம், லட்சம், கோடி என செல்கிறது. இது, கள்ளகாதலுக்கு ஏற்றவாறு இந்த தொகை மாறுபடும்.
இதே பிரச்சனை, காவல் நிலையத்திற்கு சென்றால் அவர்களும் பணம் வாங்குகிறார்கள். இது எனக்கு மிக நன்றாக தெரியும். ஆனால், நான் வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே வாங்குகிறேன். இது, மிகவும் குறைவான தொகை என்று தெரிவித்து இருக்கிறார். ஏதோ, நாட்டிற்கு மிகப்பெரிய சேவை செய்து விட்டது போல தி.மு.க.வின் ஆதரவாளர் இடிமுரசு இஸ்மாயில் பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே, தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் நிறுவனருமாக இருப்பவர் சுப.வீரபாண்டியன். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது இவ்வாறு கூறினார் ; காதல் என்பது ஒன்று தான் அதில் என்ன? நல்ல காதல் கள்ள காதல். அதனை, திருமணம் கடந்த உறவு என்று சொல்லலாம் என கள்ள காதலுக்கு புது விளக்கம் கொடுத்து இருந்தார் சுப.வீரபாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.