எங்க ஊர்காரர்கள் எனக்கு வைத்த பெயர் என்ன தெரியுமா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவரது, பேச்சுக்கள் அனைத்தும் பிரிவினையை தூண்டும் விதமாகவும், தேசத்திற்கு விரோதமாகவும் இருக்கும். அந்த வகையில், இவர் அளந்து விடும் பொய்களுக்கும், கட்டுக்கதைகளுக்கும் இன்று வரை ஒரு முடிவே ஏற்படவில்லை என்பதே கசப்பான உண்மை. இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட சீமான் இவ்வாறு பேசினார்;
சென்னை விமான நிலையத்தில் பணி செய்யும் அதிகாரிகளில் 90% சதவீதம் பேர் பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள். யார்? வந்தாலும் அடையாள அட்டையை காட்டு என கேட்கிறார்கள். நான் யார் தெரியுமா? சர்வதேச தீவிரவாதி டா என்னிடமா ஐ.டி கார்டு கேட்கிறே என குறிப்பிட்டு இருக்கிறார். ஒரு அடி கூட வாங்காமல், தன்னை ஒரு தீவிரவாதி என்று ஒப்புக் கொண்ட சீமானை என்.ஐ.ஏ. அமைப்பு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற சமயத்தில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து பேசும் போது, எனது கட்சி அகில உலக கட்சி, 63 நாடுகளில் என் கட்சி இருக்கு என்று ஆவேசமாக பேசியிருந்தார். இவரது, பேச்சை கேட்டு அறிவார்ந்த தம்பி, தங்கைகள் கை தட்டி வரவேற்று இருந்தனர். தமிழகத்தில், ஒரு எம்.எல்.ஏ. சீட்டு கூட வெற்றி பெற முடியாத சீமானுக்கு 63 நாடுகளில் கட்சி இருந்து என்ன? பயன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், சீமான் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அக்காணொளியில், எங்க ஊர்காரர்கள் எனக்கு வைத்த பெயர் என்ன தெரியுமா? பைத்தியகார பய என்று குறிப்பிட்டுள்ளார். சீமானின், ஊர்காரர்களுக்கு தெரிந்த விஷயம் அவரை பின்பற்றும் தம்பி தங்கைகளுக்கு தெரியவில்லையே என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.