ஹிந்துக்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்ததும் விதமாக, கோயம்புத்தூரில் உள்ள புகழ் பெற்ற 6 கோவில்கள் மீது தனது கவனத்தை முபின் செலுத்தி இருப்பதாக உளவுத்துறை பகீர் தகவலை தெரிவித்துள்ளது என பிரபல ஆங்கில ஊடகம் பகீர் தகவலை வெளியிட்டு இருக்கிறது.
கோவை மாவட்டம், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த அக்டோபர் மாதம் 23- ம் தேதி அன்று அதிகாலை கார் ஒன்று சுக்கு நூறாக வெடித்து சிதறியது. இச்சம்பவத்தில், காரில் பயணம் செய்த 25 வயது மதிக்கதக்க ஜமேஷா முபின் என்பவர் பலியானார். கார் சிலிண்டர் வெடித்ததால் முபின் இறந்து இருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு, தடயவியல் துறையை சேர்ந்த வல்லுனர்கள் அப்பகுதி முழுவதும் சல்லடை போட்டு ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, ஏராளமான ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் கிடைத்தன.
இந்த பொருட்கள், மிகப்பெரிய வெடி விபத்தை ஏற்படுத்துவதற்கான சமிக்கை என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். இதனை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனக்கு கிடைத்த ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இதனை தொடர்ந்து, இச்சம்பம் தமிழகத்தையும் கடந்து இந்தியா முழுவதும் பேசுப்பொருளாக மாறியிருந்தது. அந்த வகையில், கோவை குண்டு வெடிப்பு வழக்கை தற்போது என்.ஐ.ஏ. தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை உளவுத்துறை தெரிவித்து இருப்பதாக பிரபல ஆங்கில ஊடகமான நியூஸ் 18 வெளியிட்டுள்ளது. அந்த ஊடகம் வெளியிட்டு இருப்பதாவது ;
மிகப்பெரிய குண்டு வெடிப்பை நிகழ்த்தும் பொருட்டு, பல்வேறு வெடிமருந்து பொருட்களை வாங்கி பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அதில், பொட்டாசியம் நைட்ரேட், கந்தகம் உள்ளிட்ட வெடிப்பொருட்களை தேர்வு செய்து இருக்கின்றனர். இதையடுத்து, அடுத்த கட்டமாக மிகப்பெரிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஹிந்துக்கள் அதிகம் கூடும் 6 கோவில்களை தேர்வு செய்து அங்கு குண்டு வெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளதாக நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பில் உடல் கருகி இறந்த போன ஜமேஷா முபின் வீட்டில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் சல்பர் போன்ற வெடிபொருட்கள் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முபீன் இறப்பதற்கு முன்பு தனது, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் “என்னுடைய மரணம் குறித்த செய்தி உங்களுக்குத் தெரிந்தால், என் தவறுகளை மன்னித்து, என் குறைகளை மறைத்து, ஜனாஸாவில் பங்கேற்று எனக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று பதிவிட்டிருந்தார். இது தற்கொலைப்படை தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்பு பயங்கரவாதிகள் பயன்படுத்தும் வாசகம் என்று சொல்லப்படுகிறது.