தமிழகத்தில் பால்விலையை உயர்த்தி விட்டு மத்திய அரசு மீது தி.மு.க. அமைச்சர் பழி சுமத்தி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, சிமெண்ட விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு என்று பல்வேறு வழிகளிலும் வரிகளை இந்த அரசு உயர்த்தி வருகிறது. இதன் காரணமாக, ஏழை, எளியவர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இதனிடையே, 47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அனைத்து மாநில அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து, அரிசி, பருப்பு, கோதுமை, உள்ளிட்ட பொருட்களுக்கு 5% சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பது என அனைத்து மாநிலங்களும் தங்களது ஒப்புதலை தெரிவித்து இருந்தன. அதேபோல, தயிர், லஸ்ஸி மற்றும் பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5% சதவீதம் வரி விதிக்கப்படுவது என முடிவு செய்யப்பட்டு இருந்தன.
இந்த முடிவுகள் அனைத்தும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டு இருந்தன. எனினும், ஜி.எஸ்.டி. கவுன்சில் சொன்ன விலையை காட்டிலும், மூன்று மடங்கு பால் பொருட்களுக்கான விலையை இந்த விடியா அரசு உயர்த்தி இருந்தது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இப்படிப்பட்ட சூழலில் தான், பால் விலையை தி.மு.க. அரசு திடீரென ரூ. 12 உயர்த்தி இருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, பால் விலை உயர்வுக்கு மத்திய அரசும் அதுகொண்டு வந்த ஜி.எஸ்.டி.யும் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். இதில், கொடுமை என்னவென்றால் பாலுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை விதிக்கவில்லை என்பதே உண்மை. இது கூட தெரியாமல்அமைச்சர் பேசியிருக்கிறார்.