கடந்த மூன்று நாட்களாக மின்சாரமின்றி நாங்கள் கஷ்டப்படுகிறோம் என்று கழக கண்மணி ஒருவர் கதறிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி அமைந்த பின்பு, பொதுமக்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். அந்தவகையில், கொலை, கொள்ளை, திருட்டு என சட்டம் ஒழுங்கு பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதற்கு மத்தியில், தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அடாவடிகள் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வை சேர்ந்த கழக கண்மணி ஒருவர் காணொளி ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது ;
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுக்கா சீத்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவன் நான். எனது, ஊரில் மின்சாரம் போய் மூன்று நாட்கள் ஆகிறது. மின்சாரம் போனால், ஒரு மணி நேரத்திற்குள் வந்து விடும் என்று அமைச்சர் ( செந்தில் பாலாஜி ) கூறினார். மின் அலுவலகத்திற்கு, தொடர்ந்து போன் செய்து வருகிறோம். எங்களுக்கு, உரிய பதில் கிடைக்கவில்லை. போனுக்கு வாய் இருந்தால் அழுது விடும். ஜே.இ.யை (இளநிலை பொறியாளர்) தொடர்பு கொண்டால், அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருக்கு. யாரிடம் தான் நாங்கள் முறையிடுவது. ஐயா, ஸ்டாலின் அவர்களே பார்த்து செய்யுங்க, 19 வயதில் தி.மு.க.விற்கு 20 கள்ள ஓட்டு போட்டவன் நான் ஒருவனாக தான் இருக்க முடியும் என்று உருக்கமுடன் பேசியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பகலில் கழக கண்மணிகளின் தொல்லை, தொடர் மின்வெட்டால் கொசு தொல்லை இதற்கு எல்லாம் எப்போதுதான் விடிவு காலம் பிறக்குமோ என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.