வி.சி.க. தலைவர் திருமாவிற்கு பல்வேறு கேள்விகளை பிரபல நெறியாளர் ரங்கராஜ் பாண்டே முன்வைத்து இருக்கிறார். இக்காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர், மத்திய அரசு, பாரதப் பிரதமர் மோடி மற்றும் ஹிந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்க கூடியவர். இதுதவிர, ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் அவர்களின் வழிபாட்டுமுறைகளை இன்று வரை கொச்சையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில், வழக்கத்தில் இல்லாத மனுஸ்மிருதி நூலை மேற்கோள் காட்டி ஹிந்து பெண்களை இழிவுப்படுத்தி இருந்தார்.
அந்த வகையில், சனாதனத்தை அழிப்பேன், ஹிந்து மதத்தை அழிப்பேன், என்று மேடை தோறும் திருமாவளன் பேசி வருகிறார். இதற்கு, இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள் மற்றும் பிரிவினைவாதிகள் மறைமுகமாக தங்களது ஆதரவினை அவருக்கு வழங்கி வருகின்றனர் என்பதே பலரின் குற்றச்சாட்டு. இதனிடையே, வழக்கத்தில் இல்லாத மனுஸ்மிருதி நூலை ஒரு லட்சம் பிரதி எடுத்து வி.சி.க. சார்பில் மக்களுக்கு விநியோகம் செய்வோம் என்று அக்கட்சி கூறியிருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர் மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முக தன்மை கொண்ட பாண்டே பிரபல இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார் ;
1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராஜ ராஜ சோழன் ஹிந்துவா? சைவமா? என்ற குழப்பம் உங்களுக்கு வருகிறது. ஆனால், 3000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக சொல்லப்படுகிற மனுஸ்மிருதி நூல் எப்படி? ஹிந்து மத நூலாக மாறியது. அப்போது, மட்டும் ஹிந்து மதம் இருந்ததா? ஊர் முழுக்க சொல்கிறீர்கள் மனுஸ்மிருதியை எதிர்ப்போம், சனாதனத்தை எதிர்ப்போம், ஹிந்து மதத்தை எதிர்ப்போம் என்று சொல்கிறீர்கள். மனுஸ் மிருதி ஹிந்து மதத்தின் அடையாளம் என்று சொல்கிறீர்கள். 1,000 வருடத்திற்கு முன்பு ஹிந்து என்று எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், 3000, வருடத்திற்கு முன்பு மட்டும் எப்படி? எங்களை ஹிந்து என்று சேர்த்து கொள்கிறீர்கள் என பாண்டே கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு, வி.சி.க. தலைவர் பதில் சொல்வாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.