அமைச்சருக்கு தொகுதி மக்கள் பாராட்டு: வைரலாகும் காணொளி!

அமைச்சருக்கு தொகுதி மக்கள் பாராட்டு: வைரலாகும் காணொளி!

Share it if you like it

அமைச்சர் பொன்முடி தொகுதிக்கு உட்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதாக பொதுக்கள் குற்றம் சாட்டிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே, அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள்., எம்.பி.க்கள் என பலரின் பேச்சு மக்களின் முகத்தை சுளிக்கும் வகையில் இருந்து வருகிறது. உதாரணமாக, சீனியர் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, துரைமுருகன், எம்.பி. 2ஜி புகழ் ஆ.ராசா, டி. ஆர். பாலு மற்றும் ஆபாச பேச்சாளர் சைதை சாதிக் உள்ளிட்ட பலரையும் கூறலாம். அதிலும் குறிப்பாக, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிதான் அடிக்கடி பல்வேறு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

அந்த வகையில், முகையூர் ஒன்றிய பெண் சேர்மனை, “ஏம்மா, நீ எஸ்.சி-தானே?” என்று மேடையிலே கேட்டு அவமானப்படுத்தினார். அதேபோல, அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிப்பதை “ஓ.சி. பஸ்லதான் வந்தீங்க” என்று நக்கலாகப் பேசி கொச்சைப்படுத்தினார். கடந்த அக்டோபர் 2-ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் பெண் ஒருவரை ஒருமையில் பேசினார். இப்படியாக இவரது ஏச்சும் பேச்சும் இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள அமைச்சர் பொன்முடியின் தொகுதிக்கு உட்பட்ட சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரித்தது தொடர்பாக பொதுமக்கள் தங்களது கடும் எதிர்ப்பினை காட்டினர். இதையடுத்து, கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, பொதுமக்களை சமாதானப்படுத்தும் விதமாக அமைச்சர் நேரடியாக களத்திற்கு சென்றார். இருப்பினும், மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர். இதனால், கடுப்பான அமைச்சர் கிராம மக்களில் ஒருவரை பார்த்து போடா மயிறு என்று திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில் தான், அமைச்சர் பொன்முடியின் தொகுதியை சேர்ந்த ஒருவர் தங்களது பகுதியில் உள்ள சாலைகள் படுமோசமான முறையில் இருப்பதாகவும், தங்களுக்கு எந்தவிதமான தீர்வினையும் அமைச்சர் ஏற்படுத்தி தரவில்லை என்று ஆவேசமாக பேசிய காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள அமைச்சர் பொன்முடியின் தொகுதிக்கு உட்பட்ட சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரித்து, புதிதாக டி.எடப்பாளையம் ஊராட்சியை உருவாக்க வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆகவே, உள்ளாட்சி நாளையொட்டி நேற்று நடந்த கிராமசபை கூட்டத்தை கிராமமக்கள் புறக்கணித்தனர். மேலும், கடைகளை அடைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிடும்படி வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, கிராமமக்களை சமாதானப்படுத்தும் வகையில், நேற்று மதியம் அக்கிராமத்திற்கு வருகை தந்த அமைச்சர் பொன்முடி, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, அவரை முற்றுகையிட்ட கிராமமக்கள், சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதனால், பொதுமக்களுக்கும் அமைச்சருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி, எதிர்த்து கேள்வி கேட்ட ஒருவரை பார்த்து, போடா மயி… என்று தடித்த வார்த்தையை பயன்படுத்தி ஒருமையில் திட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதை கூட்டத்தில் இருந்த யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு, அமைச்சர் பொன்முடி இன்றைக்கும் முதல்வர் ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்து விட்டாரா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it