ராஜீவ் காந்தி இறந்த போது தாம் அழுததாக நளினி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991- ஆம் ஆண்டு மே 21 தேதி மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இச்சம்பவம், உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இத்தாக்குதலில், 16 தமிழ் குடும்பங்கள் தங்களது உறவுகளை இழந்து இன்று வரை தவித்து வருகின்றன. அந்த வகையில், தனது அன்னையை இழந்த அப்பாஸ் அண்மையில் டைம்ஸ் நவ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார் ;
பத்து வயதில் இருந்தே அப்பா, அம்மா இல்லாமல் வளர்ந்து கொண்டு இருக்கோம். உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று கவர்னர் காலம் தாழ்த்தி விட்டதாக சொல்லி தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. தீர்ப்பை விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை. 31 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்தார் என்று சொல்கிறார்கள். ஒரு நாள் சிறையில் இருந்து பாருங்க என்று சொல்பவர்களுக்கு என்னை போல 16 தமிழ் குடும்பம், அம்மா அப்பா இல்லாமல் அவர்களின் வாழ்வாதாரமே சின்னா பின்னமாகி, இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள்.
அவர்களை பற்றி நினைத்து பார்த்தீர்களா? இதற்கு, ஒரே காரணம் கவர்னர் காலம் தாழ்த்தியது தான். இதற்கு, ஆயிரம் காரணம் இருக்கலாம். தமிழக சட்ட சபையில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி விட்டார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து இவர்கள் யோசித்து பார்த்தார்களா? எங்களுக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது. உச்சநீதிமன்றம் வேண்டுமானால் தீர்ப்பு வழங்கி அவர் வெளியே வந்திருக்கலாம்.
ஆனால் ஆண்டவன் தீர்ப்பு இருக்கு. நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். எங்கள் வலி, வேதனை சும்மா இல்லை. என் பத்து வயதில் அம்மாவை பொட்டலாம் போல கையில் கொடுத்தார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களுக்கு என்ன நியாயம்? இருக்கு. இந்திய பிரதமரை கொலை செய்தால் வெளியில் வரலாம். இதுதான், நாட்டின் உண்மையான தீர்ப்பா? இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கு. நான் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு இருக்கேன். நிறைய போராட்டம் பண்ணி இருக்கேன் என்று கூறியிருந்தார்.
இதனிடையே, ராஜீவ் கொலை குற்றவாளி பேரறிவாளனை தமிழக அரசு அண்மையில் விடுதலை செய்து இருந்தது. இந்நிலையில், நளினி, முருகன் உள்ளிட்டவர்களையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு விடுதலை செய்து இருந்தது. இப்படிப்பட்ட சூழலில், பத்திரிகையாளர்களை சந்தித்த போது நளினி இவ்வாறு கூறினார் ;
“நாங்கள் காங்கிரஸ் குடும்பம் தான்.. இந்திரா காந்தி இறந்தபோது குடும்பமே அழுதுகொண்டு இருந்தோம். ராஜிவ் காந்தி இறந்தபோது வீட்டில் சமைக்கக் கூட இல்லை அழுகைதான் என கூறியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.