தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலகம் கட்ட அரசு இடத்தில் அடிக்கல்நாட்டு விழா நடந்த பொழுது அது சர்ச்சுக்கு சொந்தமான இடம் என கூறி கிறிஸ்தவர்கள் ரகளையில் ஈடுபட்டு விழாவை நடத்தவிடாமல் தடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் புதிதாக பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட அதற்கான இடம் தேர்வுசெய்ய ஆய்வு செய்த பொது அங்குள்ள புனித ஜோசெப் சர்ச்சு வளாகத்திற்குள் அரசிற்கு சொந்தமான 90 சென்ட் இடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அங்கு பணிகள் துவங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஷண்முக நாதன் தலைமையில் அடிக்கல் நாட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அப்போது சுமார் 50 கிருஸ்தவர்களுடன் அங்குவந்த சர்ச்சு பங்குத்தந்தை அடிக்கல்லை நடவிடாமல் தகராறில் ஈடுபட்டனர் பின்னர் அடிக்கல் நட தோண்டப்பட்டிருந்த குழிக்குள் படுத்துக்கொண்டு அடாவடி செய்தனர் இதனை தொடர்ந்து அடிக்கல் நாட்டும் திட்டத்தை கைவிட்ட சட்டமன்ற உறுப்பினர் அவ்விடத்தை விட்டு சென்றார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் ஆணையர் அவ்விடம் அரசிற்கு சொந்தமானது என்றும் அவ்விடத்தை சர்ச்சை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து கொண்டு அடாவடி செய்வதாகவும் கூறினார்.