தி.மு.க. ஆட்சியில் வழங்கப்படும் ரேஷன் அரிசி தரமற்ற முறையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்ட துவங்கி இருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
மக்கள் விரும்பும் அரசை வழங்குவதே எனது லட்சியம் என கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். அவரின், உறுதி மொழியை நம்பி தி.மு.க.வை மக்கள் அரியணையில் அமர்த்தினர். இந்த ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. எனினும், மக்கள் விரும்பும் அரசாக ஸ்டாலின் அரசு இல்லை என்பதே நிதர்சனம். எங்கும் கொலை, கொள்ளை, திருட்டு என மக்கள் அஞ்சி நடுங்கி வாழும் அவலநிலையே இருந்து வருகிறது. இதுதவிர, மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து ஒலித்த வண்ணம் உள்ளது. அதேபோல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரமும் படுமோசமாக உள்ளது.
இப்படியாக, விடிந்தும் விடியாத அரசாக இந்த ஆட்சி செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான், மதுரை மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்து இவ்வாறு பேசியிருக்கிறார் ;
அ.தி.மு.க. ஆட்சியில் தரமான ரேஷன் அரிசி வழங்கப்பட்டது. அதன் பிறகு, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தாரு. இந்த ஆட்சியில் கொடுக்கும் அரிசியை தரமானதாக இல்லை. அந்த, அரிசியை நாங்கள் சாப்பிடாமல் கீழே கொட்டினால் ஆடு, மாடு, கோழி எதும் சாப்பிடுவதில்லை என தனது கோவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.