ரூ.1.20 லட்சம் கொடுத்து மதம் மாற்றம்: சர்ச்சுக்கு வராததால் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய பாதிரியார்!

ரூ.1.20 லட்சம் கொடுத்து மதம் மாற்றம்: சர்ச்சுக்கு வராததால் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய பாதிரியார்!

Share it if you like it

மத்தியப் பிரதேசத்தில் 1.20 லட்சம் ரூபாய் கொடுத்து மதம் மாற்றிவிட்டு, அக்குடும்பத்தினர் ரெகுலராக சர்ச்சுக்கு வராததால் ஆத்திரமடைந்த பாதிரியார் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பட்டியலின குடும்பத்தினர், பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட, அதே மாவட்டத்தில் கிறிஸ்தவ மிஷனரியை நடத்தி வரும் பாதிரியார் அஜய் லால், அந்த பட்டியலின குடும்பத்தினரை சந்தித்து, உதவி செய்வதுபோல 1.20 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். பின்னர், அத்தம்பதியை கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தி இருக்கிறார். இதனால், வேறுவழியின்றி அத்தம்பதியும் மதம் மாறி இருக்கிறார்கள். ரெகுலராக சர்ச்சுக்கு சென்று வந்த நிலையில், அத்தம்பதியினரின் குடும்பத்தினரையும் மதம் மாறும்படி, பாதிரியார் அஜய் லால் நெருக்கடி கொடுத்து வந்திருக்கிறார்.

ஆனால், குடும்பத்தினர் மதம் மாற மறுத்து விட்டனர். ஆகவே, பாதிரியார் என்ன சொல்வாரோ என்று அச்சமடைந்த அத்தம்பதியினர், சர்ச்சுக்கு போவதை நிறுத்திவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பாதிரியார் அஜய் லால், கொடுத்த பணத்தை 4 மடங்காகத் திருப்பித் தருமாறு வற்புறுத்தி வந்திருக்கிறார். மேலும், ஆட்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டி வந்திருக்கிறார். இதுகுறித்து மேற்படி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அத்தம்பதி, மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. ஆகியோரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த அத்தம்பதியினர் மீடியாக்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்பேட்டியில் “ஆரம்பத்தில் எங்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து 1.20 லட்சம் ரூபாய் கொடுத்தனர். தேவாலய சேவையில் கலந்துகொள்ளவும், ஹிந்து மதத்தைப் பின்பற்றுவதை நிறுத்துப்படியும் எங்களை கேட்டுக் கொண்டனர். நாங்கள் ஆரம்பத்தில் சர்ச் அமர்வுகளில் கலந்துகொண்டோம். ஆனால், பின்னர் எங்களால் முடியவில்லை. எனவே, நாங்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றத் தவறினால், அவர்கள் ஏற்கெனவே வழங்கிய தொகையை 4 மடங்கு வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்று எங்களை மிரட்டத் தொடங்கினர். இதில் 90,000 ரூபாயை திருப்பிக் கொடுத்து விட்டேன். மீதியையும் விரைவில் கொடுத்து விடுவோம்.

ஆனால், சர்ச் உறுப்பினர்களான தாமஸ், கெவிஜு, ஃப்ளெக்ஷன், ரினு, சாஜன் ஆகியோர் 4 மடங்கு சேர்த்து 5 லட்சம் ரூபாய் சேர்த்துத் தர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். எனவே, பிஷப் அஜய் லால் உள்ளிட்டோருக்கு எதிராக தமோ காவல் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால், போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ” என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்.) எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும்படி மத்தியப் பிரதேச மாநில டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியது. மேலும், தேசிய மகளிர் ஆணையமும் (என்.சி.டபுள்யூ) இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு, இவ்வழக்கில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு மத்திய பிரதேச மாநில டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டிருக்கிறது. இதுகுறித்து அதன் தலைவர் ரேகா ஷர்மாவும், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது கும்பலை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். எனினும், பிஷப் அஜய் லால் மாவட்ட நிர்வாகத்துடன் மிகநெருங்கிய நட்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


Share it if you like it