கிருஷ்ணகிரியில் மதமாற்ற கும்பலை ஹிந்துக்கள் விரட்டியடித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, கட்டப்பஞ்சாயத்து என குற்றச்செயல்கள் ஒருபுறம் அதிகரித்து வருகிறது. மறுபுறம், மதமாற்றமும் கனஜோராக நடந்து வருகிறது. பள்ளிகளில் பயிலும் சிறு குழந்தைகள் முதல் கிராமப் பகுதிகளில் வசிக்கும் அப்பாவி மக்கள் வரை மதமாற்றம் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழகத்தில் மதமாற்றம் என்பது மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய லைவ் சர்வேயில் இது வெட்ட வெளிச்சமானது. இந்த மதமாற்றம் தற்போது வட மாவட்டங்களிலும் புரையோடிப் போயிருக்கிறது என்பதுதான் வேதனை.
இதை மெய்ப்பிக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை பகுதியில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சிலர் வீட்டை வாடகைக்கு எடுத்து ஜெபக்கூட்டங்களை நடத்தி வந்ததோடு, சட்டவிரோத மதமாற்றத்திலும் ஈடுபட்டு வந்தனர். இது அப்பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனிடையே, வாரத்தில் ஒரு நாள் மட்டும் நடந்துவந்த ஜெபக்கூட்டம், தினசரி நடக்க ஆரம்பித்தது. மேலும், கட்டாய மதமாற்றமும் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. பழையபேட்டை பகுதி முழுவதும் ஹிந்துக்கள் வசிக்கும் ஏரியாக்களில் கிறிஸ்தவம் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது, பிரசாரத்தில் ஈடுபடுவது என இருந்து வந்தனர்.
இதையடுத்து, ஹிந்துக்கள் கொதித்தெழுந்தனர். இயேசு கிறிஸ்து தொடர்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கி, பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களை, ஹிந்துக்கள் முற்றுகையிட்டனர். அப்போது, எப்படி கட்டாய மதமாற்றம் செய்யலாம் என ஹிந்துக்கள் கேள்வி எழுப்ப, பதிலுக்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடமிருக்கிறது என கிறிஸ்தவர்கள் கூற, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சிலர், தேவையில்லாமல் சில வார்த்தைகளை விடவே, இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பழையபேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.