நாங்குநேரி எம்.எல்.ஏ.வின் தற்காலிக நீக்கத்தை நிறுத்தி வைப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் அறிவித்து உள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் கே.எஸ். அழகிரி. இவரது, தலைமையில் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா சத்திய மூர்த்தி பவனில் அண்மையில் நடைபெற்றது. அப்போது, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனின் ஆதரவாளர்களுக்கும் கே.எஸ். அழகிரி ஆதரவாளர்களுக்கும் மத்தியில் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அது மோதலாக வெடித்தது. இதனை தொடர்ந்து, கட்சி அலுவலகமே ரத்த களறியாக மாறி இருந்தது. இச்சம்பவம், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தன.
இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தற்காலிகமாக கட்சியில் இருந்து ரூபி மனோகரனை நீக்கி வைப்பதாக அதிரடி அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். இப்படிப்பட்ட சூலில், ஒழுங்கு நடவடிக்கை குழுவில் முறையாக விசாரணை நடைபெறவில்லை என்றும், அவருக்கு எதிரான அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைப்பதாக காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிவித்துள்ளார். இரு தலைவர்களின் முரண்பட்ட செயல்பாடு கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸில் உட்கட்சி பூசல் தலைவிரித்து ஆடி வரும் சூழலில் எதற்கு ராகுல் காந்தி பாத யாத்திரை செல்கிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.