டெல்லி விமான நிலையத்தில் ராணுவம் தன்னை சுற்றி வளைத்த நிகழ்வு குறித்து சீமான் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவரது, பேச்சுக்கள் அனைத்தும் பிரிவினையை தூண்டும் விதமாகவும், தேசத்திற்கு விரோதமாகவும் இன்று வரை இருந்து வருகிறது. குறிப்பாக, இவர் அளந்து விடும் பொய்களுக்கும், கட்டுக்கதைகளுக்கும் இன்று வரை ஒரு முடிவே இல்லை என்பதே கசப்பான உண்மை. இப்படிப்பட்ட சூழலில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சீமான் இவ்வாறு பேசினார்;
நான் எனது அண்ணன் மற்றும் தம்பி அண்மையில் டெல்லிக்கு சென்று இருந்தோம். விமான நிலையத்திற்கு நாங்கள் வந்தபோது தம்பி காரை சற்று தள்ளி நிறுத்தி விட்டு வருகிறேன் என்று சென்றுவிட்டான். நான் முன்னாடி சென்று விட்டேன். எனது அண்ணன் தம் அடித்து விட்டு வருகிறேன் என்று அவரும் சென்று விட்டார். திடீர் என்று சுற்றி ராணும் என்னை வளைத்து விட்டது. தம்பி அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டான். எனது அண்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்று விட்டார். வந்தவர்கள் எல்லாம் என்னை கட்டி பிடித்து கொண்டு அண்ணா ஒரு போட்டோ எடுத்துக் கொள்கிறேன் என்று தம்மிடம் கேட்டதாக சத்தமாக சிரிக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் பணி செய்யும் அதிகாரிகளில் 90% சதவீதம் பேர் பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள். யார்? வந்தாலும் அடையாள அட்டையை காட்டு என கேட்கிறார்கள். டேய், நான் சர்வதேச தீவிரவாதி டா என்னிடமா ஐ.டி கார்டு கேட்கிறே என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.