ராகுல் மீது காங்கிரஸ் தலைவர்கள் கோவம்!

ராகுல் மீது காங்கிரஸ் தலைவர்கள் கோவம்!

Share it if you like it

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரச்சாரம் செய்யாமல் மற்ற மாநிலங்களில் பாத யாத்திரை செல்லும் ராகுல் காந்தி மீது அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் கோவத்தில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ’பாரத் ஜோடோ யாத்திரா’ எனும் பெயரில் நீண்ட தூர நடைப்பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இந்த, பயணம் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கி, காஷ்மீரில் நிறைவு பெறும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி செல்ல வேண்டி அக்கட்சி மேலிடம் திட்டமிட்டு இருக்கிறது. இதையடுத்து, அவர் ஒவ்வொரு மாநிலமாக சென்று வருகிறார். இவர், நடைப்பயணத்தில், பல்வேறு நகைச்சுவை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளன.

இதனிடையே, தெலங்கானாவில் தனது நடை பயணத்தை மேற்கொண்டு இருந்த சமயத்தில்தான் அம்மாநிலத்தில் நடந்து முடிந்த முனுகோட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர துவங்கின. இதில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் படுதோல்வியை தழுவி இருந்தார். இதில், கொடுமை என்னவென்றால் காங்கிரஸ் வேட்பாளருக்கு டெபாஸிட் தொகை கூட கிடைக்கவில்லை என்பது தான் ஹைலைட்.

ராகுல் காந்தி, ஒரு மாநிலத்தில் கால் வைக்கும் முன்பே அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த தலைவர்கள் தங்களை பா.ஜ.க.வில் இணைத்து கொள்கின்றனர். இதனிடையே, பாரத் ஜோடாவின் யாத்திரையின் போது ராகுல் காந்தி பேசும் வண்ணம் மிகப்பெரிய கூட்டத்தை அக்கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். அப்போது, தேசிய கீதத்தை ஒலிக்க செய்யுங்கள் என ராகுல் காந்தி உத்தரவிடுகிறார். அதற்கு, நேபாள் நாட்டு தேசிய கீதத்தை அவர்கள் ஒலிக்க வைத்த சம்பவம்தான் நாடு முழுவதும் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், குஜராத் மாநிலத்தில் வெகுவிரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில், பா.ஜ.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் ராகுல் காந்திக்கு உண்டு. எனினும், இதுகுறித்து எல்லாம் கவலைப்படாமல் தேர்தல் இல்லாத மாநிலங்களில் அவர் பாத யாத்திரை செல்வது வீண் வேலை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதே கருத்தினையே குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்களும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it