நாளைய பிரதமர் தளபதி என தமிழக முதல்வர் ஸ்டாலினை ஒரே ஒரு தொண்டர் மட்டும் கூவி அழைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி அமைந்து 16 மாதங்களை கடந்த விட்டது. எனினும், மக்கள் விரும்பும் அரசாக இந்த ஆட்சி இல்லை என்பதே நிதர்சனம். எங்கு பார்க்கினும், கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் லஞ்சம் லாவண்யம் தலைவிரித்து ஆடி வருகிறது. இதுதான் காரணமாக, பொதுமக்கள் பெரும் அச்சத்தில் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. விடியல் ஆட்சியில் நடக்கும் அவலங்கள் குறித்து பேச வேண்டிய ஊடங்கள் வாய் மூடி கள்ள மெளனம் சாதித்து வருகிறது.
தமிழகத்தின் நிலைமை இவ்வாறு இருந்து வருகிறது. இதுதவிர, தமிழக முதல்வர் ஸ்டாலினை மற்ற மாநில முதல்வர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பதே நிதர்சனம். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டி இவர் எழுதிய கடிதத்திற்கு எந்த ஒரு முதல்வரும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக அரசின் முடிவுகளை கேட்கும் முன்பே தன்னிச்சையாக பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறார் என்பதை அனைவரும் நன்கு அறிவர்.
தமிழக மக்களிடமும், மற்ற மாநில முதல்வர்களிடமும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு எந்த மாதிரியான மரியாதை கிடைத்து வருகிறது என்பதை நாடே அறியும். இதனிடையே, தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, தொண்டர்கள் அவரை வரவேற்றனர். கூட்டத்தில், இருந்த ஒருவர் மட்டும் நாளைய பிரதமர் தளபதி என கூவி அழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.