தமிழக முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்ளும் ரயில் பெட்டிக்கான கட்டணம் ரூ. 2 லட்சம் இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று முதன் முறையாக ரயிலில் பயணம் மேற்கொள்கிறார். தென்காசி மாவட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கும் விதமாக அங்கு செல்கிறார். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென்காசிக்கு, பொதிகை அதிவிரைவு ரயிலில் இரவு 8.44-க்கு சென்றார். வி.ஜ.பி.க்கள்., பயணம் மேற்கொள்ளும் ’சலூன் பெட்டி பொதிகை ரயிலின் கடைசியில் இணைக்கப்பட்டது. அதில், முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, அரசு உயர் அதிகாரிகள் என பலர் பயணம் மேற்கொண்டனர்.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கர்வனர், முதல்வர் உள்ளிட்டவர்கள் பயணம் மேற்கொள்ளும் வகையில் ரயில்வே நிர்வாகம் அதனை பிரத்தியேகமாக வடிவமைத்துள்ளது. இதில், குளியலறை, 2 படுக்கையறை, பெரிய ஹால், உணவு பரிமாறும் அறை, சோபா, நாற்காலி, டிவி என பிரமாண்ட நட்சத்திர விடுதிபோல அந்த ரயில் பெட்டி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த சொகுசு பெட்டிக்கான ரயில் கட்டணம் ரூ. 2 லட்சம் இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.