மன்னார்குடி நகராட்சி சார்பில் கட்டப்பட்ட குளம் நான்கே நாட்களில் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. மூத்த தலைவரும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் டி.ஆர்.பி. ராஜா. மன்னார்குடி நகராட்சி சார்பில் ரூ1.24 கோடி செலவில் ருக்குமணி குளம் கரைகளை வலுப்படுத்தும் விதமாக கல் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிவு பெற்றதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையில், குளத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகுதியில்லாத ஒப்பந்தகாரர்களை பணியில் அமர்த்தியதே இதற்கு முக்கிய காரணம் என்று பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதேசமயத்தில், இதில், ஏதேனும் ஊழல் நடந்திருக்குமா? என்பது குறித்து எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.