அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி செம்புலிங்கத்தை 8 காவலர்கள் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவத்தில் அவர் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய கல்வி கொள்கை திட்டம், புதிய வேளாண் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம், என மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. எனினும், இந்த திட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதற்கு, வலுசேர்க்கும் விதமாக நடிகர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும், முந்தைய அ.தி.மு.க. அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சந்தி சிரித்து வருகிறது. இதுதவிர, லாக்கப் மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் என்பவரை எட்டு காவலர்கள் மிக கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திடீரென அவர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கோவை அன்னுரை சேர்ந்த விவசாயிகளின் விருப்பமின்றி அவர்களது நிலத்தை தமிழக அரசு கைப்பற்ற முயன்று வருகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின், உரிமைக்கு குரல் கொடுக்கும் விதமாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அன்னூர் விவசாயிகளை சந்தித்து தனது ஆதரவினை வழங்கி இருந்தார்.
இப்படியாக, தமிழகத்தில் விவசாயிகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. உழவன் ஃபவுண்டேஷன் வைத்து இருக்கும் நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு ஆதரவாக எப்போது குரல் கொடுப்பார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.