ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உதவியுடன் செயல்பட்டு வரும் ரத்த வங்கிக்கு மிக உயரிய விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.
நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருப்பது இரத்தம். நம், உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு, உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உடல் உறுப்புக்கள் முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அந்தவகையில், மனிதனுக்கு இரத்தம் மிகவும் இன்றியமையாததாக இருந்து வருகிறது. இதன்காரணமாக, பல தன்னார்வலர்கள் இன்றுவரை தாமாக முன்வந்து குருதி கொடையை வழங்கி வருகின்றனர். அதேபோல, பல தொண்டு நிறுவனங்கள் அரசிடமிருந்து உரிய அனுமதி பெற்று ரத்த வங்கியை நடத்தி வருகின்றன. அந்தவகையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணையுடன் சேலத்தை சேர்ந்த புசல்கர் என்பவர் சிவராம் என்கிற பெயரில் ரத்த வங்கி ஒன்றினை நடத்தி வருகிறார்.
ஏழை, எளியவர்கள், சாலை விபத்தில் சிக்கியவர்கள், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காட்டு விலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு வேண்டிய ரத்தத்தை சேலம் சிவராம் ரத்த வங்கி தக்க சமயத்தில் கொடுத்து உதவி வருகிறது. அந்தவகையில், சேலம் ரத்த வங்கியின் மூலமாக பலரின் விலைமதிப்பற்ற உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த அமைப்பின் தலைவர் ’புசல்கரின்’ சேவையை போற்றும் விதமாக, “விக்யான் சன்ஸ்தா ரத்னா விருது” மும்பையில் உள்ள தி இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அலும்னி அசோசியேஷன் எனும் அமைப்பு வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.