நரிக்குறவ மற்றும் குருவிக்கார மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இது, தமிழக பா.ஜ.க.விற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இதனிடையே, தமிழக பா.ஜ.க.வின் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலந்து கொண்ட அண்ணாமலை நரிக்குறவர் சமூகத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன் என கூறியிருந்தார். இதையடுத்து, பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜீன் முண்டா மற்றும் பாரதப் பிரதமர் மோடியின் கவனத்திற்கு அண்ணாமலை கொண்டு சென்றார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக, நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது. இதையடுத்து, அச்சமூகத்தை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் தங்களது நன்றியை பா.ஜ.க.விற்கு தெரிவித்து இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில், தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தை சேர்ந்தவர்களை பழங்குடி சமூக மக்கள் பட்டியலில் சேர்க்கும் சட்டமசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி சொல்லப்படுகிறது.