6 படங்களுக்கு, ஹீரோவாக புக்கீங் செய்யப்பட்டவர் உதயநிதி. இந்த கட்சியின் சுமையை தாங்கி கொள்ள தந்தைக்கு உதவியாக வந்தவரை விமர்சனம் செய்யாதீர்கள் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
பல்லாவரம் சட்டமன்ற தொகுதி பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா மாபெரும் பொதுக்கூட்டம் அண்மையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், கலந்து கொண்ட நாஞ்சில் சம்பத் இவ்வாறு பேசினார் ;
தி.மு.க.வில் வாரிசு அரசியல் இருப்பதாக சொல்கிறார்கள். அதுவெல்லாம், சும்மா. குடும்பமாக இருக்கிறோம், அது கழகமாக இருக்கிறது. உதயநிதியை சொல்லும் நீங்கள் அகிலேஷ் யாதவை சொன்னீர்களா? ஜெகன் மோகன் ரெட்டியை சொன்னீர்களா? யார்? மீதும் கல்லெறியாத நீங்கள் உதயநிதியை மட்டும் விமர்சனம் செய்வது வன்மம்.
ஒரு கட்சிக்கு சமாதி கட்ட வேண்டும் என்றால், ஆழமான குழியை வெட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு செங்கல் போதும் என்று நிருபித்தவர் உதயநிதி. 6 படங்களுக்கு, ஹீரோவாக புக்கீங் செய்யப்பட்டவர் உதயநிதி. இந்த கட்சியின் சுமையை தாங்கி கொள்ள தந்தைக்கு உதவியாக வந்திருக்கிறார் என்றால் அவர் இந்நாட்டில் தியாகம் செய்து இருக்கிறார். உதயநிதியை காயப்படுத்துவதன் மூலம், உதய சூரியனை காயப்படுத்தலாம் என்று கருத கூடாது என பேசியுள்ளார்.