டெல்லி முதல்வர் மீது மோசடி மன்னன் சுகேஷ் பரபரப்பு  புகார்!

டெல்லி முதல்வர் மீது மோசடி மன்னன் சுகேஷ் பரபரப்பு புகார்!

Share it if you like it

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தாம் ரூ. 60 கோடி கொடுத்ததாக மோசடி மன்னன் சுகேஷ் பகீர் தகவலை தெரிவித்துள்ளான்.

டெல்லி முதல்வராக இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர், ஆம் ஆத்மி கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது, ஆட்சியின் மீது பல்வேறு ஊழல் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், இவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இவர், உள்துறை, மின்சாரம், பொதுப்பணித்துறை, தொழில், நகர்ப்புற வளர்ச்சி ஆகிய முக்கிய இலாகாக்களையும் கூடுதலாக கவனித்து வந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் 1.62 கோடி ரூபாய் வரை பணமோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதனடிப்படையில் அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது. இந்த, விசாரணையில் அமைச்சர் ஊழல் செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, நீதிமன்றம் அவரை திகார் சிறைக்கு அனுப்பியது.

இப்படியாக, டெல்லி முதல்வரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டான். அப்போது, பத்திரிகையாளர்களிடம் பேசிய அவன், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலை தாம் சந்தித்ததாகவும் அக்கட்சிக்கு ரூ.60 கோடியை தாம் கொடுத்ததாக தெரிவித்துள்ளான். இச்சம்பவம், டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it