தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் வாட்ச்க்கு பில் கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி பெண்மணி ஒருவர் வெளுத்து வாங்கிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
அவர், வெளியிட்ட காணொளியில் கூறியதாவது ; ஆடு மேய்ப்பவருக்கு ரூ. 5 லட்சத்தில் வாட்ச் எப்படி? வந்தது என அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்கிறார். அவர், என்ன சொல்ல வருகிறார். ஆடு வளர்ப்பவர்கள், கோழி வளர்ப்பவர்கள் கோமணம் கட்டி கொண்டு, கும்பிடு போட வேண்டும் என நினைக்கிறாரா? ஆடு மற்றும் கோழி வளர்ப்பு ஒரு நல்ல பிசினஸாக இருந்து வருகிறது.
படித்த இளைஞர்கள், கூட இந்த தொழிலுக்கு வருகின்றனர் என்ற அடிப்படை அறிவு கூட அமைச்சருக்கு இல்லை என்பது நமக்கு தெரிய வருகிறது. அவர், படித்த ஐ.பி.எஸ். அதிகாரி, ரூ. 3 லட்சத்துக்கு தன்னால் ஒரு வாட்ச் வாங்க முடியாதா? திருட்டு ரயிலில் வந்தவர்களின் வாரிசுகள் எல்லாம், ரூ. 14 கோடியில் வாட்ச் வாங்குகிறார்கள். அவர்கள், பற்றியெல்லாம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏன்? கேள்வி கேட்கவில்லை.
அண்ணாமலையிடம் பில் இருக்கா? இல்லையா? என அமைச்சர் கேட்கிறார். அசுரன், படம் ரிலீஸ் ஆன அன்று மூல பத்திரம் எங்கே? என்று நாங்கள் கேட்டோம். ஆனால், மூல பத்திரம் இருக்கா? இல்லையா? என்று கூட சொல்ல முடியவில்லை. அண்ணாமலையிடம், பில் கேட்கும் நீங்கள், உங்கள் துறையான டாஸ்மாக்கில் ஏன்? பில் கொடுக்கவில்லை.
சிறு தொழில் செய்பவர்கள் கூட QR Code வைத்து இருக்கின்றனர். டாஸ்மாக்கில், அந்த கோடு ஏன்? இல்லை. டாஸ்மாக்கில், மது ரூ. 10, 20 என கூடுதலாக வைத்து விற்கப்படுகிறது. இதன்மூலம், ஆயிர கணக்கான கோடி லஞ்சம், ஊழல், டாஸ்மாக்கில் நடைபெற்று வருகிறது.
ஒரு, ஏழை வீட்டிற்கு கொடுக்கும் ரூ.100 லிருந்து 10, 15 என்று பிடிங்கி கொண்டு இருப்பவர்கள் நீங்கள். அவரிடம், வாட்ச்க்கு பில் கொடு என்று கேட்கிறீர்கள் என காட்டமாக பேசியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.