கொரோனா பெரும் தொற்றில் சிக்கி தற்போது சீனா திணறி வருகிறது. இந்த நிலையில், தோழர் அருணன் எங்கே? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உலகில் அதிகம் வெறுக்கப்படும் நாடாக, தற்போது சீனா மாறியுள்ளது. ஒட்டு மொத்த உலக நாடுகளையும், கொரோனா எனும் பெருந்தொற்றில் சிக்க வைத்த கொடுமை அந்நாட்டையே சாரும். இதன்காரணமாக, லட்சகணக்கான மக்கள் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். பல்வேறு நாடுகள் தங்களது பொருளாதாரத்தை இழந்து தவித்து வருகின்றன. எனினும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லை என்பதால் அக்கொடிய நோய் தனது கோர முகத்தை இங்கு காட்ட முடியவில்லை. பா.ஜ.க. அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் பலனாக கொரோனா தொற்று இந்தியாவில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த, வரலாற்று சாதனையை புரிந்த மோடி அரசை உலக நாடுகள் வெகுவாக பாராட்டியுள்ளன. மற்ற நாடுகளுக்கு இந்தியா முன்உதாரணமாக உள்ளது என உலக சுகாதார மையம் பாராட்டி இருந்தன. எனினும், இந்த சாதனையை தி.மு.க., காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பாராட்டவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன், சுந்தரவள்ளி போன்றவர்கள் இந்தியாவை மட்டம் தட்டி வந்தனர். அதேவேளையில், கொரோனாவை எப்படி? கட்டுப்படுத்துவது என்று சீனாவை பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், கொரோனாவை பரப்பிய சீனாவே இன்று அந்நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதன்காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளை ஜின்பிங் அரசு விதித்து வருகிறது. ஏற்கனவே, பொருளாதாரத்தையும் தங்களது வாழ்வாதாரத்தையும் இழந்து அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், கொடூங்கோல் சீன கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், சீனாவில் கடந்த 20 நாட்களில் 25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தற்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், விவரங்களுக்கு பொதிகை செய்தியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வாழும் நாட்டிற்கு துளியும் விசுவாசம் இல்லாமல், சீனாவிற்கு முட்டு கொடுத்து வரும் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் சீனாவின் அழிவை குறித்து பேசுவார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.