பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசி கொண்டு இருக்கும் போதே பணியில் இருந்த பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தி.மு.க. நிர்வாகிகளின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் என அனைவரும் ஒருவித அச்சத்துடனே நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம் இரவு, தி.மு.க., சார்பில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகர ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், பொதுக்கூட்டம் நிறைவு கட்டத்தை எட்டியிருந்தது.
அப்போது, 129-வது வட்ட இளைஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் இருவர், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களிடம் கீழ்த்தரமாகவும், அருவருக்கதக்க வகையிலும் நடந்து கொண்டனர். மேலும், அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற காவலர்கள் இவரையும் மடக்கி பிடித்தனர். இந்த நிலையில், பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த கட்சியினர், காவலர்களிடம் அவர்களை விடுமாறு கடும் வாக்குவாதம் செய்தனர். இதனை தொடர்ந்து, மேடையில் இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபாகர ராஜா, இந்த நேரத்தில் எந்த பிரச்சனையும் வேண்டாம் என காவலர்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.
இதனிடையே, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என கனிமொழி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.