என்னிடம் இருக்கும் மிகப்பெரிய பலமே இஸ்லாமிய மூவ்தான். என்னிடம் மோதினால் அவ்வளவுதான் என்று இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் மிரட்டல் விடுத்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே, பாரத பிரதமர் மோடிக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்களை கக்கி வருகின்றனர் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகள். அதேபோல, பா.ஜ.க. மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் வசைகளுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராகவும், கிறிஸ்தவ சமூகத்துக்கு எதிராகவும் பேசுபவர்கள், கடும் விமர்சனங்களுக்கும், வசவுகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு நீதிபதிகளும் தப்பவில்லை. பிரதமர் மோடிக்கும், நீதிபதிகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்த சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில்தான், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் நபர், “நாங்கள் (இஸ்லாமியர்கள்) இந்த உலகத்தை 1,400 வருடங்கள் ஆட்சி செய்தவர்கள். இந்தியாவை 1,000 வருடங்கள் ஆட்சி செய்திருக்கிறோம். அதேபோல, 800 வருடங்கள் ஸ்பெயினை ஆட்சி செய்திருக்கிறோம். அந்த இறையாட்சியை மீண்டும் கொண்டு வர நினைக்கிறோம். இதற்குப் பெயர் தீவிரவாதமல்ல. இதற்குப் பிறகும் என்னை நீங்கள் தேவையில்லாமல் சீண்டினால், அவ்வளவுதான்.
என்னிடம் இருக்கும் மிகப்பெரிய பலமே இஸ்லாமிக்கல் மூவ்தான். அதை மட்டும் நான் கையில் எடுத்துவிட்டால்… மத்திய அரசாங்கத்துக்கும், போலீஸ் ஐ.ஜி.க்கும் நான் எச்சரிக்கை விடுக்கிறேன். பா.ஜ.க. அரசை தட்டைத் தூக்க வைத்து விடுவேன். எப்புடின்னு நெனைக்காதீங்க. என்னிடமிருக்கும் இல்மை உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே, தேவையில்லாம் என்னிடம் மோதி, உங்கள் பலத்தையும், வீரத்தையும் காட்டலாம் என்று நினைக்காதீர்கள்” என்பதாக நீள்கிறது அந்த வீடியோ. இந்த வீடியோவில் இருக்கும் நபர் யார் என்பது தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.