தமிழக முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் எங்கே? என சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுவரும் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம், வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் 22 இடங்கள் உட்பட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் இச்சோதனை நடந்தது.
இச்சோதனையின்போது வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. கடந்த 7 நாட்கள் தொடர்ச்சியாக வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இச்சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சொல்லப்படுகிறது.
ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடந்த ரெய்டில் 700 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதையும், கணக்கில் வராத 3.5 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் சபரீசனுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், சபரீசன் எங்கே? இருக்கிறார் என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.