கொரோனவை விரட்ட ஊர் ஊராக சென்று ஜெபக்கூட்டம் – தலைமை ஆசிரியையை போலீசில் பிடித்து கொடுத்த பொதுமக்கள்..!

கொரோனவை விரட்ட ஊர் ஊராக சென்று ஜெபக்கூட்டம் – தலைமை ஆசிரியையை போலீசில் பிடித்து கொடுத்த பொதுமக்கள்..!

Share it if you like it

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் பர்கூர் காவல் நிலையத்தில் காவலராக பணிசெய்து வரும் ஜெயராமன் என்பவரது மனைவியும், அரசு பள்ளி தலைமை ஆசிரியையுமான ராணி என்பவர் கொரோனாவை விரட்டுவதாக கூறிக்கொண்டு குட்டி யானையில் கூட்டம் கூட்டிக்கொண்டு ஊர் ஊராக சென்று ஜெபக்கூட்டம் நடத்தியுள்ளார் அப்போது பெரிய குரும்பபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் இவர்களை தடுத்து, 144 தடையுத்தரவு அமலில் உள்ள நிலையில் கூட்டம் கூட்டிக்கொண்டு ஊர் ஊரக சுற்றுவது சரியா ..? என கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது அங்குள்ள ஒருகுடும்பத்திற்கு சுகம் அளிக்க தாங்கள் செல்வதாக கூறி போலீஸ் காரரின் மனைவி என்ற தோரணையில் அனைவரையும் மிரட்டி உள்ளார். உடனடியாக பொதுமக்கள் ஈரோடு காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அங்குவந்த போலீசார் அந்த கூட்டத்தை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.


Share it if you like it