‘குட்டி செந்தில்பாலாஜி’ யார் தெரியுமா..? சஸ்பென்ஸ் உடைத்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!

‘குட்டி செந்தில்பாலாஜி’ யார் தெரியுமா..? சஸ்பென்ஸ் உடைத்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!

Share it if you like it

தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதுபோல, அமைச்சர் செந்தில்பாலாஜி 8 அடி பாய்ந்தால், அவரது சிஷ்யர் எஸ்.எஸ்.சிவசங்கர் 16 அடி பாய்கிறார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “செந்தில்பாலாஜி கைது தி.மு.க.வுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜூனியராக யார் இருப்பார் என்று நான் ஆராய்ச்சி செய்து பார்த்தேன். அந்த ‘குட்டி செந்தில் பாலாஜி’ யார் என்றால், இந்த மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்தான். ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயலாளர்.

செந்தில்பாலாஜி ஒரு ரகம் என்றால், சிவசங்கர் வேறொரு ரகம். அவர் பணம் வாங்கிக் கொண்டு வேலை கொடுப்பார். Cash for Job Scam. சிவசங்கர் பணம் வாங்கிக் கொண்டு டிரான்ஸ்பர் கொடுப்பார். Cash for Transfer Scam. என்று செல்கிறது. அடுத்து அண்ணனுக்கு இருக்கு. அடுத்த தி.மு.க. ஃபைல்ஸில் அண்ணனின் பெயர் இருக்கிறது. அமைச்சர் சிவசங்கர் 36 பேரின் பணி மாறுதலுக்கு 12 கோடி ரூபாய் வாங்கி இருக்கிறார். என்ன பண்ணுவாங்க, வழக்கம்போல என் மீது இன்னொரு கேஸ் போடுவாங்க.

ஏற்கெனவே 1,460 கோடி ரூபாய்க்கு மானநஷ்ட வழக்கு போட்டிருக்கிறார்கள். அதை மானமுள்ளவர்கள் போட வேண்டும். நீங்கள் ஏன் போடுகிறீர்கள். அடுத்ததாக சிவசங்கர் என் மீது ஒரு வழக்கை எடுத்து வருவார். வாங்க, நீங்கள் யாரிடம் பணம் வாங்கி இருக்கிறீர்கள் என்று சொல்கிறேன். செந்தில்பாலாஜி 8 அடி தாண்டினால் அவரது சிஷ்யர் நான் 16 அடி தாண்டுவேன் என்று நிற்கிறார் சிவசங்கர். அவரது ஏஜென்ட் ஒரு ஆச்சரியமான நபர். அவர் லஞ்ச ஒழிப்புத்துறையால் தேடப்படும் குற்றவாளி. ஆனால், சிவசங்கர் வீட்டுக்குச் சென்றால், அவரது பக்கத்திலேயே அந்த தேடப்படும் குற்றவாளி அமர்ந்திருப்பார்” என்று சொல்லி தி.மு.க.வுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it