அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் மின்சாரம், மதுவிலக்குத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர், நேற்றைய தினம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு உடல் நடலக்குறைவு ஏற்பட்டது. அந்த வகையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதுதவிர, சீனியர் அமைச்சர்கள் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியின் அறையின் அருகிலேயே அமர்ந்துள்ளனர். இந்த காணொளியை இன்றும் சமூகவலைத்தளங்களில் காண முடியும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், அமைச்சர் கைது செய்யப்பட்டதில் மனித உரிமை மீறல் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணையை மேற்கொள்ள மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார். இவர், தி.மு.க. நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.