5 வகை சட்னியுடன் சங்கீதா ஹோட்டல் இட்லிதான் வேணும்… ஆஸ்பத்திரியில் அடம் பிடித்த அமைச்சர்?!

5 வகை சட்னியுடன் சங்கீதா ஹோட்டல் இட்லிதான் வேணும்… ஆஸ்பத்திரியில் அடம் பிடித்த அமைச்சர்?!

Share it if you like it

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, நெஞ்சு வலி காரணமாக ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகி இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி, 5 வகை சட்னியுடன் சங்கீதா ஹோட்டல் இட்லி கேட்டு அடம் பிடித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கடந்த 13-ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், 14-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் கைது செய்வதாக அறிவித்தது. இதையடுத்து, தனக்கு நெஞ்சு வலிப்பதாக செந்தில்பாலாஜி கூறவே, ஓமாந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு 3 இடத்தில் அடைப்பு இருப்பதாக கூறி, அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தார்கள்.

இதனிடையே, ஓமாந்தூரார் மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியிடம் நேரில் விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி அல்லி, அவரை 28-ம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, சிறைத்துறை போலீஸாரின் கண்காணிப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் செந்தில்பாலாஜி. அதேசமயம், ஓமாந்தூரார் மருத்துவமனை வழங்கிய செந்தில்பாலாஜியின் மருத்துவ அறிக்கையை ஏற்க இயலாது என்றும், எய்ம்ஸ் மருத்துவக் குழுவை வைத்து பரிசோதிக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, சம்பவத்தன்று காலை வரை நன்றாக வாக்கிங் சென்றுவந்த செந்தில்பாலாஜிக்கு எப்படி ரத்த நாளங்களில் 3 இடத்தில் அடைப்பு இருக்க முடியும். தவிர, அப்படியே அடைப்பு இருந்தால் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்களாகியும் செந்தில்பாலாஜிக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்படாதது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், ஓமாந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார் செந்தில்பாலாஜி. இங்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் செந்தில்பாலாஜி, காலை டிபனாக சங்கீதா ஹோட்டல் இட்லியும், 5 வகை சட்னியும் வாங்கி வரும்படி அடம் பிடித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த செய்திதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it