இந்தியாவில் இருந்து 88,032 கோடி மதிப்பிலான ரூ. 500 நோட்டுகள் காணவில்லை என சன் நியூஸ் மீண்டும் ஒரு பொய் செய்தியை வெளியிட்டு தனது வன்மத்தை காட்டியிருக்கிறது.
சன் டிவி ஊடகத்தின் ஆசிரியராக இருப்பவர் குணசேகரன். இவர், பாரதப் பிரதமர் மோடி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள், மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்யும் வகையில் செய்திகளை வெளியிட கூடியவர். குறிப்பாக, ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை குறிவைத்து தாக்குவதை தனது கொள்கையாக கொண்டவர். இப்படியாக, இவரது ஊடக அறம் இருந்து வருகிறது. இதனிடையே, உ.பி.யை சேர்ந்த முஸ்லீம் முதியவர் ஒருவரை ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல கூறி கடுமையாக தாக்கியிருந்ததாக செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் இருந்து 88,032 கோடி மதிப்பிலான ரூ. 500 நோட்டுகள் காணவில்லை என சன் நியூஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. அதாவது, அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 88,032 கோடி மதிப்பிலான ரூ.500 நோட்டுகள் கணக்கில் வரவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிர்ச்சியளிக்கும் பதில் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 2015 – டிசம்பர் 2016 காலகட்டத்தில் 8,810.65 மில்லியன் எண்ணிக்கையில் ரூ. 500 நோட்டுகள் அச்சடித்து விநியோகிக்கப்பட்ட நிலையில், 1,760.65 மில்லியன் நோட்டுகள் மட்டுமே ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளன என ஆர்.டி.யை கேள்விக்கு பதில் அளித்துள்ளது என சன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வழக்கம் போல மீண்டும் ஒரு பொய் செய்தியை வெளியிட்டு சன் நியூஸ் மீண்டும் அசிங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நான் இந்த news channel பார்க்கவே மாட்டேன்