முதல்வர் சொன்னதையே மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன் – வானதி  சீனிவாசன்!

முதல்வர் சொன்னதையே மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன் – வானதி சீனிவாசன்!

Share it if you like it

பா.ஜ.க. மூத்த தலைவர் வானதி சீனிவாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தி.மு.க.வினர் எப்போதுமே ஜனநாயகம், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை பற்றி வகுப்பெடுப்பார்கள். ஆனால், எல்லாம் மற்றவர்களுக்குத்தான். அதிகாரம் கைக்கு வந்தால் தி.மு.க.வினர் சர்வாதிகாரிகளாக மாறிவிடுவார்கள். அதுதான் இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திமுக மற்றும் அதன் சர்வாதிகார செயல்பாடுகளை ஜனநாயக முறையில் விமர்சித்ததற்காக எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டிருக்கிறார். எந்தவொரு அடக்கு முறைக்கும் பா.ஜ.க தொண்டர்கள் அஞ்சமாட்டார்கள். இரு வாரங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட சிலரது டிவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியபோது, ‘கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெறிப்பது அல்ல’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதையே அவருக்கு மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன், என தெரிவித்துள்ளார்.


Share it if you like it