தமிழக பயணத்தை பீகார் முதல்வர் திடீரென ரத்து செய்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு, தி.மு.க. அமைச்சர்கள்தான் காரணமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திருவாரூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், 7,000 சதுர அடியில், ரூ. 12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று திறந்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, தி.மு.க. மூத்த தலைவரும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு. பீகார் மக்களுக்கு மூளையே கிடையாது என பேசியிருந்தார். இதனை தொடர்ந்து, ஹிந்தியை கற்றுக் கொண்டால் பானிபூரியைதான் விற்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். இதனிடையே, ஹிந்தி தெரியாது போடா எனும் வாசகம் கொண்ட டீ சர்ட்டை அணிந்து கொண்டு ஹிந்தி மொழி பேசும் மக்களை உதயநிதி ஸ்டாலின் இழிவுப்படுத்தி இருந்தார். இப்படியாக, ஹிந்தி மொழியையும், பீகார் மக்களையும், தி.மு.க.வினர் தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழகம் வருவதாக இருந்த பீகார் முதல்வர் தனது பயணத்தை திடீரென ரத்து செய்து விட்டார். இதுதான், தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.