சமூகநீதி, சுயமரியாதை, பெண் விடுதலை, என மேடைதோறும் பேச கூடியவர்கள் தி.முக. தலைவர்கள். எனினும், அதனை தாங்கள் மட்டும் கடைப்பிடிக்க மாட்டார்கள் என்பதை தமிழகமே நன்கு அறியும். அதற்கு, பல்வேறு உதாரணங்களை குறிப்பிட்டு கூறலாம். அந்த வகையில், கடந்த ஆண்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ’மாண்டஸ் புயல்’ பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட காசி மேட்டிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்று இருந்தார். அவருடன், சென்னை மேயர் பிரியா, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்று இருந்தனர். பட்டியல் சமூகத்தை சேர்ந்த அதுவும் ஒரு பெண் மேயருக்கு தி.மு.க. தரும் மரியாதை இதுதானா? என பலர் தி.மு.க.வை மிக கடுமையாக சாடியிருந்தனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தி.மு.க. ஐ.டி. விங் தினமொரு கலைஞர்மொழி என ஒரு பொன்மொழியை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, சட்டங்களால் மட்டுமே சாதிபேதத்தை ஒழித்துவிட முடியாது. மனமாற்றமே அதை அகற்றும் மாமருந்து என தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தி.மு.க. எந்த மாதிரியான மரியாதையை கொடுக்கும் என்பதை உலகமே அறியும். அதையெல்லாம், மறந்து விட்டதா? தி.மு.க. என நெட்டிசன்கள் பசுமையாக பாராட்டி வருகின்றனர்.
.