சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மேடையில் இருந்த முதியவரை கீழே இறக்கி விட்ட காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
தி.மு.க.வின் சார்பில் அண்மையில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே, மேடையில் முதியவர் ஒருவர் அமர்ந்து இருந்தார். இதனை கண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மேடையில் இருந்து கீழே இறங்குமாறு முதியவரிடம் வலியுறுத்தி இருக்கிறார். இதனை, சற்றும் எதிர்பார்க்காத முதியவர் முரண்டு பிடிக்க அமைச்சர் அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விடுவது போல அந்த காணொளி அமைந்துள்ளது. தி.மு.க.வில் மூத்த உறுப்பினர்களுக்கு இதுதான் மரியாதை என்பதை இப்போதாவது கழக கொத்தடிமைகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.